கவிதை

கவிதை
Sudhagar

Monday, 18 August 2014

என் அம்மா உனக்காக

நம் இருவர் நிழலில் ஓர் உயிர்
அதுவே எனது ஆருயிர்

நம் இருவர் நிழலில் ஓர் உயிர்
அதுவே எனது ஆருயிர்

அழுவதைக் கண்டு பசி என்றேன்
சிரிப்பதைக் கண்டு நான் சிரித்தேன்
தவழும் பொது மெய் மறந்தேன்
நடக்கும் பொது என்னை மறந்தேன்
ஏங்கினேன் நீ அழைப்பாய் என்னை
தாங்கினேன் என் நெஞ்சில் உன்னை

ஏங்கினேன் நீ அழைப்பாய் என்னை
தாங்கினேன் என் நெஞ்சில் உன்னை

நம் இருவர் நிழலில் ஓர் உயிர்
அதுவே எனது ஆருயிர்

பேசினாய் அம்மா என்று
தேடினாய் அப்பா என்று
துன்கினாய் தொட்டிலில் அன்று
ஓடினாய் பள்ளிக்கு இன்று
வாடினேன் உன்னை காண
பாடினேன் நீயும் தூங்க
வாடினேன் உன்னை காண
பாடினேன் நீயும் தூங்க

நம் இருவர் நிழலில் ஓர் உயிர்
அதுவே எனது ஆருயிர்

கணிதத்தில்  நூற்றுக்கு நூறு
கணிசமாய் பேச்சில் திமிரு
உன்னை போல் உலகில் யாரு
உணர்ந்தேன் உன் செயலினில் பாரு
பார்க்கத்தான் என்னைப் போல
குணமெல்லாம் அவரைப் போல
பார்க்கத்தான் என்னைப் போல
குணமெல்லாம் அவரைப் போல

நம் இருவர் நிழலில் ஓர் உயிர்
அதுவே எனது ஆருயிர்

வேண்டியதை வாங்கித் தந்தேன்
வாழ்க்கையை கற்று தந்தேன்
வான் வரை கூட்டிச் சென்றேன்
வாழ்க்கையை வாழச் சொன்னேன்
உன் வாழ்வின் தொடக்கம் இன்று
என் வாழ்வின் முடிவும் இன்று
உன் வாழ்வின் தொடக்கம் இன்று
என் வாழ்வின் முடிவும் இன்று

நம் இருவர் நிழலில் ஓர் உயிர்
அதுவே எனது ஆருயிர்


பயணம்


வழி பயணம்
உன் உடன் பயணம்
உன் துணைப் பயணம்
என் விழி பயணம்
மனவலி பயணம்
நம் பயனம் 
நான் மறவா இப்பயணம் 
உன்னுடன் நான் கொண்ட என் முதற்பயணம்

                                                                                                           ~சுதாகர்