பேதை நான் நடக்க தவழ்ந்தவன் நீ
பெதும்பை நான் பேச பேதையாய் பார்த்தவன் நீ
மங்கை நான் கடக்க பின் தொடர்ந்தவன் நீ
மடந்தை நான் காளையை பார்க்க மறந்தேன் உன்னை
அரிவை நான் அறிந்தேன் உந்தன் அருமை
தெரிவை நான் சுமந்தேன் எந்தன் பிள்ளை
பேரிளம் பெண் நான் என்றும் என்னவன் துணையில் மகிழ்வுடன்.....