கவிதை

கவிதை
Sudhagar

Sunday, 8 November 2015

முதிர் கிழவன்

நெஞ்சம் நிமிர்ந்து நடந்தவன்  
முறுக்கு மீசை கொண்டவன் 

காதல் கொண்டு மணந்தவன் 
வீரம் மிக்க ஆண்மகன் 

சொந்த தொழில் இன்றியே 
கூலித்தொழில் செய்தவன் 

ஓடி ஓடி உழைத்ததால் 
படிக்க வைக்க முடிந்தது 

கடனகிடன வாங்கி 
திருமணமும் முடிந்தது 

வட்டி முதலும் அடைக்கவே 
அரையாயுள் கழித்தது

பேரன் வந்து தவழவே 
தேகம் சுருக்கம் கண்டது 

பல் எல்லாம் போகவே 
சிரிக்க மனசு தவிக்குது 

வேகமாக நடந்தவன் 
தடி ஊன்றி நிற்கிறேன் 

பதற்றத்துடன் கடந்ததை
நிதானமாய் காண்கிறேன் 

அனுபவத்தை சொல்கிறேன் 
அறிவாளி இல்லை நான்


பார்வை மங்க தொடங்கவே
வாழ்தல் கொடுமையானது 

படுத்த படுக்கை போகும் முன் 
கண்கள் மூடிக் கொள்கிறேன்


Tuesday, 29 September 2015

என்செய்வேன் நான்!!??

கூண்டு கிளியாய் அவன் தனியே 
என்செய்வேன் நான்!                        

புழுவாய் துடிப்பான் மெழுகாய் கரைவான் 
என்செய்வேன் நான்!                        

நிலவின் ஒளியும், தென்றல் காற்றும்,
சாரல் மழையும், தாயின் மடியும் 
வெறுத்து நிற்பான் 

மெல்லிசையும் எரிச்சல் என்பான் 
 எந்தன் பிரிவால்  
என்செய்வேன் நான்!                         

உண்ண மறப்பான் உறங்க  வெறுப்பான் 
சோம்பல் அடைவான் ஐயம் கொள்வான் 
என்செய்வேன் நான்!                         

எதுவும் நடக்கும் என்றான் 
என்செய்வேன்!                                    
காலன் நடத்திச் சென்றானே....
என்செய்வேன் நான்! என்செய்வேன்!???



~சுதாகர்