நெஞ்சம் நிமிர்ந்து நடந்தவன்
முறுக்கு மீசை கொண்டவன்
காதல் கொண்டு மணந்தவன்
வீரம் மிக்க ஆண்மகன்
சொந்த தொழில் இன்றியே
கூலித்தொழில் செய்தவன்
ஓடி ஓடி உழைத்ததால்
படிக்க வைக்க முடிந்தது
கடனகிடன வாங்கி
திருமணமும் முடிந்தது
வட்டி முதலும் அடைக்கவே
அரையாயுள் கழித்தது
பேரன் வந்து தவழவே
தேகம் சுருக்கம் கண்டது
பல் எல்லாம் போகவே
சிரிக்க மனசு தவிக்குது
வேகமாக நடந்தவன்
தடி ஊன்றி நிற்கிறேன்
பதற்றத்துடன் கடந்ததை
நிதானமாய் காண்கிறேன்
அனுபவத்தை சொல்கிறேன்
அறிவாளி இல்லை நான்
பார்வை மங்க தொடங்கவே
வாழ்தல் கொடுமையானது
படுத்த படுக்கை போகும் முன்
கண்கள் மூடிக் கொள்கிறேன்